
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு உயர்வு
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் உச்சவரம்பு கிராமுக்கு ரூ.10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு கிராமுக்கு ரூ.7,000 ஆக இருந்த உச்சவரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரம்பு, புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்கள் மற்றும் தற்போது புதுப்பிக்கப்படும் நகைக்கடன்களுக்கு மட்டுமே உயர்த்தப்பட்ட உச்சவரம்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











