முக்கிய செய்திகள்
📅
முகப்பு/அரசியல்/கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்
அரசியல்

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக தலை​வரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்​.​பாபு பிரபலம் அடைந்​தார். ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்​சுத்திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அமைந்​தகரை நெல்​சன் மாணிக்கம் சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை​யில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்கப்​பட்​ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்து வந்தனர். செப்டம்பர் 23-ம் தேதி முதல்​வர் விஜய் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபுவை சந்​தித்து நலம் விசா​ரித்​தார். பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. அந்தச் சூழலில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆளுநர் இரங்கல்: ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் இரங்கல்: “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

யார் இந்த வி.எஸ்.பாபு?

ஒரு காலத்தில் வட சென்னை திமுகவில் அசுர சக்தியாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வட சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

2011-ல் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011-ல் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் பாபு.

அந்த சமயத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது.

இதன் தொடர்ச்சியாக, 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018-ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பிறகு அமைதி காத்த பாபு, இபிஎஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும், அதிமுகவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு
அரசியல்•

சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற கோரி, வரும் டிச.7-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். நடிகர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தென் மாவட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு படக்குழுவினர் தலைப்பை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆர்ப்பாட்ட நாளன்று தணிக்கை குழுவிடமும் தலைப்பை மாற்ற கோரி மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

‘தவெக ஆட்சியில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது’ – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
அரசியல்•

‘தவெக ஆட்சியில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது’ – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

 6 மாத கால தவெக ஆட்சி தமிழகத்தை 6 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது, என தருமபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தருமபுரி அதிமுக அலுவலகத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும் பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கந்தசாமி வரவேற்றார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோகன் (கிழக்கு), டி.ஆர்.அன்பழகன் (மேற்கு), எம்எல்ஏ-க்கள் மரகதம் வெற்றிவேல், சம்பத்குமார் ஆகியோர் […]

தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி
அரசியல்•

தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிடம் 41 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் இன்று (நவ.21) பேட்டியளித்த அவர், தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு என்ன திட்டம் கொண்டுவந்தார்கள் மற்றும் அதனால் மக்கள் என்ன நன்மை பெற்றார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்
அரசியல்•

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் திரு.வி.க. நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ.வான வி.எஸ்.பாபு, சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்.9-ம் தேதி அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதைக் கண்டறிந்த மருத்துவ குழுவினர், உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மதியம் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →