
கல்வெட்டுகளில் அம்பத்தூர்: சோழர் காலம் முதல் இன்றைய தொழில் புரட்சி வரை..!
அன்றைய காலகட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகத்திலும் பொருளாதார முடிவுகளிலும் அம்பத்தூர் மக்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதை இது காட்டுகிறது. சென்னையின் முக்கியத் தொழில் நகரமாகத் திகழும் அம்பத்தூர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழிப்பான நிர்வாக மையமாக விளங்கியது. தொண்டை மண்டலத்தின் புழற்கோட்டத்திற்குள், ‘அம்பத்தூர் நாடு’ என்ற பெயரில் பல ஊர்களை உள்ளடக்கிய பெருநிலப் பகுதியாக இது இருந்துள்ளது. ‘ஐம்பது ஊர்களின்’ தலைமை இடமாக இருந்ததால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பழமையான கல்வெட்டுகள் அம்பத்தூரின் ஆயிரம் […]




