முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இதன்படி ஆதரவு கருத்துகள் விவரம்:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பல ஆண்டுகளாக இந்துக்களின் கண்ணில் குடிகொண்டிருந்த ஏக்கம் பஞ்சாகப் பறந்துவிட்டது. மதநல்லிணக்கம் என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித் திட்டங்களை இத்தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் மகிழ்ச்சி.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு ஓரளவு மகிழ்ச்சி. விளக்கேற்றிய வெற்றித் தூணை நாம் பார்க்கப் போகிறோம் என்ற வகையில் மகிழ்ச்சிதான்.

பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தி:நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், முழுமையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை ஒரு மதத்தின் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க அவசியம் இல்லை.

வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் நிரந்தர தீர்வு வழங்கும் என நம்புகிறோம்.

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி:தீபம் ஏற்றுவதால் யாருடைய உரிமையும் பறிபோகாது. அரசு கவுரவம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர்ப்பு – இதேபோல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தலைவர்கள் விவவரம்:

திமுக தலைவர் ஸ்டாலின்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி தமிழகத்தின் அமைதி, மதநல் லிணக்கத்தை நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்து என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை விளக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: இத்தீர்ப்பு வியப்பும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்த இது வழிவகுக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்: புதிய முறையை அறிமுகம் செய்வதும், சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்துவதும் ஆகும். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்: நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு நியாயமற்றது. இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது வரவேற்கத்தக்கது. ஆனாலும், சர்ச்சைக்குரிய இடத்தில் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது கவலை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இந்தச் சூழ்நிலையை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

எஸ்டிபிஐ மாநில தலைவர் உமர் பரூக்: இந்த தற்காலிக அனுமதி தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
ரெட்சோன் பகுதியாக திருப்பரங்குன்றம் : போலீஸ் குவிப்பு!
தமிழகம்•

ரெட்சோன் பகுதியாக திருப்பரங்குன்றம் : போலீஸ் குவிப்பு!

திருப்பரங்குன்றத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா அருகே உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதேசமயம் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞர், டிஜிபி, அமைச்சர்கள் நிர்மல் குமார், […]

“கள்ளக்குறிச்சி ஆட்சியரே புகார் அளிக்காதபோது காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்?” – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
தமிழகம்•

“கள்ளக்குறிச்சி ஆட்சியரே புகார் அளிக்காதபோது காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்?” – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பினார் என உங்களுக்கு எப்படி தெரியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு அந்த தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி […]

கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
தமிழகம்•

கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூரையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி
அரசியல்•

தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிடம் 41 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் இன்று (நவ.21) பேட்டியளித்த அவர், தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு என்ன திட்டம் கொண்டுவந்தார்கள் மற்றும் அதனால் மக்கள் என்ன நன்மை பெற்றார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →