
உத்தர பிரதேச திருமணத்தில் இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி பண மாலை
உத்தர பிரதேசத்தின் மதுராவில் நடைபெற்ற திருமணத்தில் இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்டன. உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம், நாக்லா பாண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகேந்திர சிங். இவரது தம்பி குஷாபால் சிங். இருவரின் மகன்களுக்கும் முத்செராஸ் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 21-ம் தேதி திருமண ஊர்வலத்தில் மணமகன்கள் பிரசாந்த், கன்ஹா ராகவ் ஆகியோர் குதிரைகளில் மணமகள்களின் கிராமத்துக்கு ஊர்வலமாக சென்றனர். நெருங்கிய உறவினர்கள் பரிசுகளை […]











