முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது
தமிழகம்

புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முதலில் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதையடுத்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றிலும் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, பொது நூலகத்துறை பொறுப்பு இயக்குநர் எஸ்.ஜெயந்தி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷஜீவனா நியமிக்கப்பட்டார். மேலும், புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, போலி நூல்களை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே, முறைகேடு புகார் தொடர்பாக நூலகத் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் நேற்று முன்தினம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் விசாரணையில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் ஆர்.மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் சென்னை பொது நூலக இயக்குநரகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் நூலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள மோகனின் அலுவலகம், மடிப்பாக்கத்தில் உள்ள பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் அலுவலகம், அதன் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்ட மைய நூலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கோவை பெரியார் அறிவுலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த நிறுவனங்களின் புத்தகங்கள் அச்சிடப்படும் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள அச்சகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புத்தகக் கொள்முதலுக்கான ரசீதுகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்
தமிழகம்•

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இதன்படி ஆதரவு கருத்துகள் விவரம்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பல ஆண்டுகளாக இந்துக்களின் கண்ணில் குடிகொண்டிருந்த ஏக்கம் பஞ்சாகப் பறந்துவிட்டது. மதநல்லிணக்கம் என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித் திட்டங்களை இத்தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள […]

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்
அரசியல்•

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் திரு.வி.க. நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ.வான வி.எஸ்.பாபு, சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்.9-ம் தேதி அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதைக் கண்டறிந்த மருத்துவ குழுவினர், உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மதியம் […]

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகம்•

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்
அரசியல்•

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக தலை​வரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்​.​பாபு பிரபலம் அடைந்​தார். ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →