முக்கிய செய்திகள்
📅
முகப்பு/இந்தியா/திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது
இந்தியா

திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

திருப்பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்​கின்​றனர். இவர்​களின் வசதிக்​காக திரு​மலை​யில் ‘தர்ம ரதம்’ என்​னும் பெயரில் 50 பேட்​டரி பேருந்​துகள் இலவச​மாக இயக்கப்படுகின்றன.

திரு​மலை​யில் ஆட்​டோக்​கள், ரேபிடோ உள்​ளிட்ட வசதி​கள் இல்லாததால், பக்​தர்​களுக்கு இலவச பேருந்து வசதியை திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​படுத்தி கொடுத்​துள்​ளது. இந்தப் பேருந்​துகள் எப்​போது வரும்? எங்கு செல்​லும்? என்​பது குறித்து சமீபத்​தில் ‘வெங்​க​டாத்​ரி’ செல்​போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்​நிலை​யில், இலவச பேருந்​துகள் நின்று செல்​லும் இடங்​களில் பக்​தர்​களின் வசதிக்​காக ஸ்மார்ட் பேருந்து நிறுத்​தங்​கள் ஏற்​பாடு செய்​யப்பட உள்​ளன. இந்த ஏற்​பாடு​களைச் செய்ய ரேமாண்ட்ஸ் நிறு​வனம் முன் வந்​துள்​ளது. ஏற்​கெ​னவே உள்ள 5 பேருந்து நிறுத்​தங்​கள் உட்பட மொத்​தம் 21 பேருந்து நிறுத்​தங்​கள் அதிநவீன வசதி​யுடன் இங்கு அமைக்​கப்பட உள்​ளன.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
வலுக்கும் ‘சீட்’ பகிர்வு மோதல்: உ.பி.யில் கரை சேருமா காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி?
இந்தியா•

வலுக்கும் ‘சீட்’ பகிர்வு மோதல்: உ.பி.யில் கரை சேருமா காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி?

வரலாற்றிலில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவர்கள், பழைய வரலாறே மீண்டும் வாழ வேண்டியிருக்கும் என்பது அரசியல் சொலவடை. உத்தரப் பிரதேசத்தில் கடந்த  இரண்டு (2017, 2022) சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெறும் 7 மற்றும் 2 இடங்களை மட்டுமே வென்ற தேசியக் கட்சியான காங்கிரஸ், வரும் 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் வலுவாக இருக்கும் சமாஜ்வாதி கட்சியிடம் 45 சதவீதத் தொகுதிகளைக் கேட்டுள்ளது. ‘இரண்டு தேர்தல்களிலும் மொத்தமாக 10 இடங்களில் கூட வெல்லாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 181 இடங்களைக் […]

22 ஆண்டுகால கனவு: பிரியங்கா காந்தியின் வீட்டுப் பணிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!
அரசியல்•

22 ஆண்டுகால கனவு: பிரியங்கா காந்தியின் வீட்டுப் பணிப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!

புத்தக வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். விழா மேடையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சூழ்ந்திருந்த வேளையில், சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி ஒரு பெண்ணை முதலமைச்சர் விஜய்யிடம் அழைத்து வந்தார். 22 ஆண்டுகால ஆசை முதலமைச்சர் விஜய்யிடம் […]

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: காங்கிரஸ் அறிவிப்பு
இந்தியா•

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: காங்கிரஸ் அறிவிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டெல்லி சலோ போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஒத்திவைத்துள்ளது. அதற்குப் பதிலாக, அரசியலமைப்பு தினமான நவம்பர் 26-ஆம் தேதி அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ‘அரசியலமைப்பு பாதுகாப்புப் பேரணி’ நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்குகளைக் காப்போம், தேசத்தைக் காப்போம்’இயக்கத்தின் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ‘டெல்லி சலோ’ போராட்டம் வேறொரு […]

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? – அகிலேஷ் கேள்வி
இந்தியா•

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? – அகிலேஷ் கேள்வி

“அயோத்தி – ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்?” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 1990-ல் அயோத்தியில் கர சேவகர்கள் மீது உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் டிசம்பரில் அயோத்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அயோத்திக்கு வருவதற்கு முன் கர சேவகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →