முக்கிய செய்திகள்
📅
முகப்பு/விளையாட்டு/போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா- ஆசிய விளையாட்டு
விளையாட்டு

போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா- ஆசிய விளையாட்டு

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா- ஆசிய விளையாட்டு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

ஜப்பானில் நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் போல் வால்ட்டில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பரணிகா இளங்கோவன் அசத்தியுள்ளார். இதன் மூலம் போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

நடப்பு ஆசிய விளையாட்டின் 7-வது நாளான இன்று (செப்.25) பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தடகள விளையாட்டில் போல் வால்ட் விளையாட்டில் மகளிருக்கான இறுதிச் சுற்றில் இந்தியா சார்பில் சிந்துஸ்ரீ மற்றும் பரணிகா இளங்கோவன் பங்கேற்றனர்.

இதில் 4.15 மீட்டர் உயரம் தாண்டிய பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்றார். கஜகஸ்தானின் பிலினா இவனோவாவும் 4.15 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார். இதனால் இருவரும் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் தங்கத்தை ஜப்பான் வீராங்கனையும், வெள்ளியை சீன வீராங்கனையும் வென்றனர்.

முதல்வர் விஜய் வாழ்த்து

“ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா இளங்கோவன் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு
முக்கிய செய்திகள்•

ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று முடிந்த ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இயக்குநர்களின் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெய் ஷா. ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தலைவராக அவர் பொறுப்பேற்றுக் […]

இளையோருக்கான U-19 ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா
முக்கிய செய்திகள்•

இளையோருக்கான U-19 ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா

Here is the news body text extracted from the webpage: 2026-ஆம் ஆண்டுக்கான U-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானைக் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 337 ரன்கள் குவித்தது. இலக்கைத் துரத்திய இந்தியா 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மோஹித் உல்வா மற்றும் மனல் சௌஹான் அணியை மீட்டெடுத்தனர். கடைசிப் பந்தில் 3 ரன்கள் […]

“வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயசுலயே கேப்டன்சி கொடுத்ததெல்லாம்..”.. சச்சின் டெண்டுல்கர் முக்கிய அட்வைஸ்
விளையாட்டு•

“வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயசுலயே கேப்டன்சி கொடுத்ததெல்லாம்..”.. சச்சின் டெண்டுல்கர் முக்கிய அட்வைஸ்

இந்திய கிரிக்கெட்டின் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்திய சீனியர் அணியில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்று இருக்கிறார். 2026 துலீப் கோப்பை தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக தனது 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இளம் வயதிலேயே கேப்டன்சி போன்ற தலைமைப் பொறுப்புகளை […]

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
விளையாட்டு•

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையே நடை​பெற்ற 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை இந்​திய அணி 3-2 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் மோதுகின்​றன. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 7.30 மணிக்கு ஆக்லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த தொடரை […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →