முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு

ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று முடிந்த ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இயக்குநர்களின் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெய் ஷா. ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பிசிசிஐ கௌரவச் செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தான் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜெய் ஷா, ஐசிசி நிர்வாகக் குழுவும் இயக்குநர்களும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது புதிய ரசிகர்களையும் வீரர்களையும் உருவாக்க ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய் ஷாவின் மறுநியமனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன், ஐசிசி துணைத் தலைவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவருமான தவங்வா முகுஹ்லானி, நியூசிலாந்து கிரிக்கெட் இயக்குநர் ரோஜர் ட்வோஸ் மற்றும் ஐசிசி அசோசியேட் உறுப்பினர் தலைவர் குருமூர்த்தி பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்
அரசியல்•

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் திரு.வி.க. நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ.வான வி.எஸ்.பாபு, சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்.9-ம் தேதி அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதைக் கண்டறிந்த மருத்துவ குழுவினர், உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மதியம் […]

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சனா? 007 கதாபாத்திரத்திற்குத் தேர்வாக என்ன காரணம்?
சினிமா•

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சனா? 007 கதாபாத்திரத்திற்குத் தேர்வாக என்ன காரணம்?

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ஹாலிவுட் திரையுலகில் கவனம் பெற்றுள்ளன. டேனியல் கிரேக்கிற்குப் பிறகு பெருமைக்குரிய 007 கதாபாத்திரத்தில் நடிக்க ராபர்ட் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்வுக்குப் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. “தி நேம் இஸ் பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்!” என்ற உலகப் புகழ்பெற்ற வசனத்தைக் கேட்டிராத ஹாலிவுட் ரசிகர்கள் இருக்க முடியாது. […]

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகம்•

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

“பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” – அமைச்சர் ராஜ்மோகன்
முக்கிய செய்திகள்•

“பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” – அமைச்சர் ராஜ்மோகன்

“பள்ளிகளில் இனி உடற்கல்வி வகுப்பை ஆசிரியர்கள் ரத்து செய்ய கூடாது. மீறி ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாணவர் செயற்களம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு பயிலரங்கம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்எம்எம்எஸ்) பயிற்சி புத்தத்தை வெளியிட்டு பேசியதாவது: பள்ளிகளில் வாரத்தில் 2 பாடவேளைகள் என்று இருந்த உடற்கல்வி […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →