
சீனாவின் மின் விமான சோதனை வெற்றி
சீனாவில் முதல்முறையாக மனிதர்களால் இயக்கப்பட்ட மின்சார விமான பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் வணிக விமானக் கழகம்(சிஓஎம்ஏசி), சீனா ஏவுவாகன தொழில்நுட்பக் கழகம், ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மின்சார விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிஇ-25ஏ என்ற இந்த விமானம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஆளில்லாமல் பறக்கவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் சனிக்கிழமை அன்று இந்த விமானம் மனிதர்கள் மூலம் […]











