முக்கிய செய்திகள்
📅
முகப்பு/சினிமா/அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக சிவ ராஜ்குமார்
சினிமா

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக சிவ ராஜ்குமார்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக சிவ ராஜ்குமார்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

அஜித் குமாரின் ‘டேர் டெவில்’ படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இதனை உறுதிப்படுத்தி உள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுடனான உரையாடாலில் அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இது உண்மைதான்; படத்தில் வலிமையான வில்லன் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அதற்காக பல பெயர்களை விவாதித்தோம்.

அஜித்துக்கு சிவ ராஜ்குமார் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அதனால் அவரிடம் கேட்க முடிவு செய்தோம். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் கதையை அவரிடம் விவரித்தார். அவரும் சாதகமான பதிலைச் சொல்லி இருக்கிறார். அதன் பின்னர்தான் சிவ ராஜ்குமார் படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டது.” என்றார்.

படப்பிடிப்பு குறித்த பகிர்ந்த அவர், “தற்போது இரவு நேர படப்பிடிப்பு நடந்து வருகிறது. படக்குழு ஒரு சண்டைக் காட்சியை முடித்திருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா பங்கேற்று வருகிறார்கள். டிசம்பர் வரை இப்படப்பிடிப்பு தொடரும். நவம்பர் 17 அல்லது 18 அன்று சிவ ராஜ்குமார் படப்பிடிப்பில் பங்கேற்கலாம்” என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

சிவராஜ்குமார் சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’, ‘ஜெயிலர்’, ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த அஜித் குமார், ஆதிக் ரவிசந்திரனுடன் இரண்டாவது இணைந்து ‘டேர் டெவில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரேவ் ​ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நவம்பர் 2 அன்று சென்னையில் நடந்தது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நவம்பர் 12-ல் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன், ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், சுனில், உன்னி முகுந்தன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜமும், படத்தொகுப்பை விஜய் வேலுகுட்டியும் மேற்கொள்கின்றனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சனா? 007 கதாபாத்திரத்திற்குத் தேர்வாக என்ன காரணம்?
சினிமா•

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சனா? 007 கதாபாத்திரத்திற்குத் தேர்வாக என்ன காரணம்?

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ஹாலிவுட் திரையுலகில் கவனம் பெற்றுள்ளன. டேனியல் கிரேக்கிற்குப் பிறகு பெருமைக்குரிய 007 கதாபாத்திரத்தில் நடிக்க ராபர்ட் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்வுக்குப் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. “தி நேம் இஸ் பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்!” என்ற உலகப் புகழ்பெற்ற வசனத்தைக் கேட்டிராத ஹாலிவுட் ரசிகர்கள் இருக்க முடியாது. […]

கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்
சினிமா•

கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாளரான காவ்யா மாறனுக்​கும் கிரீஸ் நாட்​டில் நேற்று திரு​மணம் நடைபெற்றது. தமிழ் திரை​யுல​கின் முன்​னணி இசையமைப்​பாளர்​களுள் ஒருவரான அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் சன் டிவி நெட்​வொர்க்​கின் நிர்​வாக இயக்​குநர்​களுள் ஒரு​வரும் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஐபிஎல் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாள​ரு​மான காவ்யா மாறன் திரு​மணத்தை கிரீஸ் நாட்​டில் நடத்த முடிவு செய்திருந்தனர். இதில் பங்​கேற்​க நெருங்​கிய உறவினர​கள் மற்​றும் முக்​கியப் பிர​முகர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி […]

“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்…” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சினிமா•

“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்…” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை

“நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்துக்குள் சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டியர் என்ற பெயரில் கமல்ஹாசன் எடுக்கும் படத்துக்கு எந்தக் காரணம் கொண்டும் அத்தலைப்பை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்பட […]

‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை
சினிமா•

‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படத்தை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குள் வைத்து எடுக்கப்பட்ட ஏராளமான காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகப் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →